தாய்லாந்தில் புயல் ஏற்படுத்திய பாதிப்புகள்

பேங்காங்: தாய்லாந்தின் தென் பகுதியில் வீசிய 'பபுக்' புயலைத் தொடர்ந்து அங்கு பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏழு மாநிலங்கள் மோசமாகப் பாதிக் கப்பட்டுள்ளன. மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயல்காற்றைத் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சம்ப்ஹார்ன், சோங்க்லா, பட்டானி, பெட்சாபுரி, பிரசாப் கிரிகான், சூரட் தானி மற்றும் நாகோன் சி தம்மாரட் ஆகிய 7 மாநிலங்கள் கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடும் புயல் மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தது 4 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர். வீசிய பலத்த காற்றில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் கீழே விழுந்ததால் மின்சாரத் தடை ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர். இந்நிலையில் பல்வேறு கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசித்த சுமார் 34,000 பேர் பாதுகாப்புக் கருதி வீடு களிலிருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

புயல் மற்றும் வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட சேத மதிப்பு 150 மில்லியன் பாட் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறினார். பபுக் புயலால் முக்கிய சுற்றுலாத் தீவுகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறினார். புயலைத் தொடர்ந்து 24 மணி நேரமாக இடைவிடாது பெய்த கனமழை காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்டதாலும் படகுச் சேவைகள் ரத்து செய்யப் பட்டதாலும் சுற்றுலாப் பயணிகள் தவிக்க நேர்ந்ததாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். படகுச் சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளதாகவும் சுற்றுலாப் பயணிகள் 10,000 பேரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் உயர் அதிகாரி கோ பான்கன் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!