பிலிப்பீன்சில் புயலும் நிலச்சரிவும்; பலி எண்ணிக்கை 126 ஆக உயர்வு

பிலிப்பீன்சில் புயலும் நிலச்சரிவும்; பலி எண்ணிக்கை 126 ஆக உயர்வு

1 mins read

மணிலா: பிலிப்பீன்சில் வீசிய கடும் புயலிலும் அதனைத் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவிலும் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் கூறினர். கடந்த டிசம்பர் 29ஆம் தேதி பிலிப்பீன்சின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளை கடும் புயல் தாக்கியது. மணிலாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள பிகோல் மலைப் பகுதி புயல் மற்றும் நிலச்சரிவால் பெரிதும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களாக இருந்ததால் குடியிருப்பாளர்கள் பலர் வீடுகளைவிட்டு வெளியேறத் தயங்கியதாக அதிகாரிகள் கூறினர். ஒரு மாதம் முழுவதும் பெய்ய வேண்டிய மழை இரண்டு நாட்களில் பெய்ததாக பேரிடர் நிவாரண அமைப்பைச் சேர்ந்த பேச்சாளர் ஒருவர் கூறினார். புயல் காரணமாக சுமார் 152,000 பேர் இடம் பெயர்ந்துள்ளனர். பேரிடரில் 75 பேர் காயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.