கோலாலம்பூர்: மலேசியாவில் போதைப்பொருள் தொடர்பான போலிஸ் சோதனையின்போது மலேசிய தற்காப்பு அமைச்சர் முகம்மது சாபுவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். தனது மகன் அகமது சைபுல் கைது செய்யப்பட்டதை அமைச்சர் முகம்மது சாபுவும் உறுதிப்படுத்தியுள்ளார். "என் மகன் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகள் மேற்கொள்ள அவர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்," என்று முகம்மது சாபு கூறினார். போலிசாரின் சோதனையின்போது அகமது சைபுல் போதைப் பொருள் உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டதாக விசாரணைக் குழுவுக்கு நெருக்கமான தகவல்கள் கூறின. போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிராக போலிசார் சனிக்கிழமை மேற்கொண்ட சோதனையின்போது சுமார் 101 பேரிடம் சோதனை நடத்தப்பட்டதாக போலிஸ் வட்டாரங்கள் கூறின.
போதைப்பொருள் சோதனையின்போது மலேசிய அமைச்சரின் மகன் கைது
1 mins read

