மலேசிய மாமன்னர் பதவியிலிருந்து சுல்தான் ஐந்தாம் முகம்மது திடீ ரென பதவி விலகியதை அடுத்து, அடுத்த மாமன்னர் யார் என்பதை முடிவுசெய்ய மலேசிய மன்னர்கள் இம்மாதம் 24ஆம் தேதி சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள் ளனர். புதிய மாமன்னரும் துணை மாமன்னரும் இம்மாதம் 31ஆம் தேதி பதவியேற்பர். பெர்லிஸ், திரெங்கானு, நெகிரி செம்பிலான், ஜோகூர், பேராக், கெடா மாநிலங்களின் மன்னர்கள் நேற்று இஸ்தானா நெகாராவில் கூடி விவாதித்தனர். அடுத்த மாமன்னரைத் தேர்வு செய்வதற் கான தேதியை முடிவுசெய்வது குறித்து நேற்று அவர்கள் ஆலோ சனை நடத்தினர்.
புதிய மலேசிய மாமன்னர் 24ஆம் தேதி தேர்வு செய்யப்படுவார்
1 mins read

