காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு தங்கச் சுரங்கம் சரிந்து விழுந்ததில் குறைந்தது 35 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதி காரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் குழந்தை களும் அடங்குவர் என்று கூறப்படுகிறது. வடகிழக்கில் உள்ள கோகிஸ்தான் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இந்த விபத்தில் மேலும் 11 பேர் காயமடைந்துள்ளதாக மாவட்டத் தலைமை நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். தகவல் தெரிந்த உடனேயே அருகில் இருந்த கிராமவாசிகள், உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர் என்றும் 30 பேரை மட்டுமே அவர்களால் காப்பாற்ற முடிந்ததது என்றும் அந்த அதிகாரி கூறினார்.
ஆப்கானிஸ்தானில் தங்கச் சுரங்கம் சரிந்ததில் 35 பேர் மரணம்
1 mins read

