இந்தோனீசிய நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு

இந்தோனீசிய நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு

1 mins read
9b51fa44-1fb5-4991-8608-afa54f6ee2d8
-

ஜகார்த்தா: இந்தோனீசி யாவில் புத்தாண்டுக்கு முதல் நாள் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் கூறினர். காணாமல் போனவர் களை கடந்த ஒரு வாரமாக தேடி வந்த மீட்புக் குழுவினர் தேடு தல் பணியை முடித்துக் கொண்டுள்ளனர். மேற்கு ஜாவா மாநிலத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரண மாக கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது. ஒருவரை மட்டும் இன்னும் காணவில்லை என்று போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.