பேங்காக் விமான நிலையத்தில் தவிக்கும் சவூதிப் பெண்

பேங்காக் விமான நிலையத்தில் தவிக்கும் சவூதிப் பெண்

1 mins read

பேங்காக்: சவூதி நாட்டு இளம் பெண் ஒருவர் பேங்காக் விமான நிலையத்தில் தவிக்க நேர்ந் துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. பேங்காக் விமான நிலையத்தில் பிடிபட்டுள்ள ரஹாஃப் முகம்மது அல் குனன் என்ற 18 வயது இளம் பெண்ணை குவைத்திற்கு திருப்பி அனுப்ப தாய்லாந்து குடிநுழைவுத் துறை அதிகாரிகள் முயன்று வருவதாகவும் ஆனால் குவைத் திரும்பிச் செல்ல அவர் மறுத்து வருவதாகவும் பேங்காக் தகவல்கள் கூறின. பேங்காக் விமான நிலையத்தில் உள்ள ஹோட்டல் அறையிலிருந்து வெளியேற அவர் மறுத்து வருவ தாகக் கூறப்படுகிறது. தன் குடும்பத்துடன் குவைத்திற்கு சென்றிருந்த ரஹாஃப் முகம்மது அல் குனன் மூன்று நாட்களுக்கு முன்பு அங்கிருந்து விமானம் மூலம் தப்பித்ததாகத் தெரிகிறது. பேங்காக்கில் இணைப்பு விமானம் வழியாக ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்றபோது பேங்காக் விமான நிலையத்தில் அவர் பிடிபட்டார்.

பிபிசி செய்தியாளர் ஒருவரிடம் பேசிய அப்பெண், தான் இஸ்லாம் மதத்தைத் துறந்ததாக கூறினார். ''சவூதி அரேபியாவுக்கு வலுக் கட்டாயமாக அனுப்பப்பட்டால் எனது குடும்பத்தால் கொல்லப் படுவேன், '' என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஐநா அதிகாரி களை சந்திக்க தன்னை அனுமதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.