இந்தியாவிலிருந்து பங்ளாதே‌ஷிற்கு தப்பிச்சென்ற ரோஹிங்யா மக்கள்

1 mins read

டாக்கா: இந்தியாவிருந்து ரோஹிங்யா முஸ்லிம்கள் பலர் அண்மையில் பங்ளா தே‌ஷிற்கு தப்பிச்சென்றதாக தகவல் கள் கூறுகின்றன. ரோஹிங்யா குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேரை இந்தியா சென்ற வாரம் மியன்மார் அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. மியன்மாரில் ரோஹிங்யா மக்களுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் பல அட்டூழியங்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்படும் வேளையில் ரோஹிங்யா மக்களை மியன்மாருக்கு திருப்பி அனுப்பும் இந்தியாவின் நடவடிக்கையை ஐநாவும் மனித உரிமை குழுக்களும் குறை கூறியுள்ளன. இந்தியா சென்ற ஆண்டு 230 ரோஹிங்யா முஸ்லிம்களை கைது செய்தது.

இந்திய எல்லையைத் தாண்டிச் சென்ற ரோஹிங்யா மக்கள் பலரை சென்ற வாரம் கைது செய்ததாக பங்ளாதேஷ் எல்லை அதிகாரிகளும் போலிசாரும் கூறியுள் ளனர். பங்ளாதே‌ஷின் தெற்குப் பகுதியில் உள்ள தற்காலிக முகாம்களுக்கு அவர் கள் அனுப்பப்பட்டதாக பங்ளாதேஷ் அதிகாரிகள் கூறினர்.