மலேசிய விமான நிலைய நிர்வாகத்தை சாடிய ஏர்ஏ‌ஷியா தலைமை நிர்வாகி

மலேசிய விமான நிலைய நிர்வாகத்தை சாடிய ஏர்ஏ‌ஷியா தலைமை நிர்வாகி

1 mins read

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் இரண்டாவது கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையக் கட்டடத்தில் (கேஎல்ஐஏ2) தேன்கூடு இருப்பதை சுட்டிக்காட்டிய ஏர் ஏ‌ஷியா விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டோனி பெர்னாண்டஸ், கேஎல்ஐஏ2 நிர்வாகத்தை சாடியுள்ளார். டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பெர்னாண்டஸ், கட்டடத்தில் தேன்கூடு இருக்கும் படத்தையும் பகிர்ந்து கொண் டார்.

இரண்டாவது கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய கட்டடத்தில் முன்பு புழுக்கள் காணப்பட்டன. பிறகு எலி, இப்போது தேனீக்கள். "விமான நிலைய வரியைக் குறைப்பதற்குத் தேன் விற்பனை மூலம் வருமானம் தேடப்பார்க்கிறார்கள் போலும்", என்று அவர் கிண்டலாகக் கூறியுள்ளார். தேனீக்களால் பொதுமக்களுக்கு ஆபத்து நேரலாம் என்றும் அவர் எச்சரித்தார். "இது விளையாட்டல்ல. இதனால் ஏர்ஏ‌ஷியா பயணிகளுக்கும் பணியாளர் களுக்கும் ஆபத்து நேரலாம். மலேசிய ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் தலைமை நிர்வாக அதிகாரி இதைக் கவனிப்பாரா?", என்று பெர்னாண்டஸ் வினவினார்.