வடகொரியத் தலைவர் கிம் சீனாவுக்கு திடீர் பயணம்

1 mins read

பெய்ஜிங்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் சீன அதிபர் ஸி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று நேற்று சீனாவுக்கு திடீர் வருகை புரிந்ததாக வடகொரிய ஊடகத் தகவல்கள் கூறின. திரு கிம் அவரது மனைவியுடன் சீனா சென்றுள்ளார். சீனாவில் திரு கிம் நாளை வரை தங்கியிருப்பார் என்று கூறப் படுகிறது. திரு கிம்முடன் வட கொரிய உயர் அதிகாரிகளும் சீனா சென்றுள்ளனர். திரு கிம் வழக்கம்போல தனி சிறப்பு ரயிலில் சீனா சென்று சேர்ந்துள்ளார். ஓராண்டில் நான்காவது தடவையாக திரு கிம் சீனா சென்றுள்ளார்.