இலங்கை ஆளுநர் பதவியில் முதன்முறையாக தமிழர்

இலங்கை ஆளுநர் பதவியில் முதன்முறையாக தமிழர்

1 mins read
4afc8ac0-aa45-4d10-83e6-7bb567f4125e
-

இலங்கை வடக்கு மாகாண ஆளுநர் பொறுப்பில் முதன் முறையாக தமிழர் ஒருவர் நிய மிக்கப்பட்டுள்ளார். டாக்டர் சுரேன் இராகவன் எனப்படும் அவர் நேற்று முன்தினம் அதிபர் மாளிகையில் ஆளுநர் பதவி ஏற்றார். இதற்கு முன்னர் வரை வடக்கு மாகாண ஆளுநராக ரெஜினால்ட் கூரே என்பவர் இருந்தார். பதவி விலகுமாறு எல்லா மாகாண ஆளுநர்களையும் அண் மையில் அதிபர் மைத்திரிபால சிறி சேன கேட்டுக்கொண்டிருந்தார். அதிபரின் முன்னாள் ஆலோ சகரான டாக்டர் சுரேன் கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளராக இருந்தவர். இலங்கையின் நேரடி அரசியல் விவகாரங்களில் பல்லாண்டு கால அனுபவம் கொண்டவரான அவர், இலங்கை அரசாங்கத்திற்கும் விடு தலைப்புலிகள் அமைப்புக்கும் இடையேயான சமாதான உடன் படிக்கை ஏற்பாடுகள் நடைபெற்ற போதும் இலங்கையின் அரசியல் மறுசீரமைப்பிலும் அதிகமாகப் பங் காற்றியவர் என்று இணையச் செய்திகள் கூறுகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் இராகவன்.