அமெரிக்க-மெக்சிகோ எல்லைப் பகுதியில் பாதுகாப்பு நெருக்கடிநிலை அதிகரித்து வருவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரித்திருக்கிறார்.
அமெரிக்காவின் தெற்கில் உள்ள எல்லைப் பகுதியின் வழியாக கள்ளக்குடியேறிகளும் போதைப் பொருட்களும் நுழைவது அமெரிக்கர்களின் பாதுகாப்பைப் பெரிது அச்சுறுத்துவதாகத் திரு டிரம்ப் இன்று தொலைக்காட்சி உரை ஒன்றில் தெரிவித்தார். எல்லைப் பகுதியில் சுவர் எழுப்ப திரு டிரம்ப் தொடர்ந்து முன்வைக்கும் திட்டத்தை ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
"நாடாளுமன்றம் தனது கடமையைச் சரிவர செய்யும் வரை அமெரிக்க ரத்தம் எவ்வளவு சிந்தவேண்டும்?" என்று திரு டிரம்ப், கள்ளக் குடியேறிகளால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் அமெரிக்கர்களைப் பற்றி பேசியபோது தெரிவித்தார்.
இது தொடர்பில் அமெரிக்க அரசாங்கம் முடக்கப்பட்டபோது, அவரச நிலையைத் தாம் அறிவிக்கலாம் என்று திரு டிரம்ப் கூறியிருந்தார். திரு டிரம்ப் இவ்வாறு செய்தால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக ஜனநாயகக் கட்சியினர் எச்சரித்தனர்.

