சவுதி அரேபியாவிலிருந்து தாய்லாந்திற்குத் தப்பியோடிய இளம்பெண்ணை அகதி என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்திருக்கிறது. இந்தப் பெண்ணுக்கு அடைக்கலம் கொடுக்க ஐ.நா ஆஸ்திரேலியாவிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த முடிவு, ரஹஃப் முகம்மது அல் குனுன் என்ற அந்தப் பெண்ணுக்குப் பெரும் வெற்றியாக உள்ளது. தற்போது தாய்லாந்தின் பேங்காக் விமான நிலையத்தில் உள்ள இவர், ஆஸ்திரேலியாவிற்குச் செல்ல முயன்றபோது தாய்லாந்து அதிகாரிகள் அவரைத் தடுக்க முயன்றதாகத் தெரிவித்தார்.
பேங்காக் விமான நிலைய ஹோட்டலின் அறை ஒன்றுக்குள் ரஹஃப் தன்னைத் அடைத்துக்கொண்டு சமூக ஊடகங்களில் பல்வேறு பதிவுகளை வெளியிட்டபோது அவரது நிலைமை பொது கவனத்தை ஈர்த்தது.

