புதிய மாமன்னராக பாகாங் சுல்தானின் புதல்வர் தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல்:

புதிய மாமன்னராக பாகாங் சுல்தானின் புதல்வர் தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல்:

1 mins read
e5ed7e5f-7745-4f13-83f9-4896dee84e7e
-

மலேசியாவின் புதிய மாமன்னராக பாகாங் சுல்தானின் புதல்வர் தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல் மலேசியாவின் புதிய மாமன்னராக பாகாங் இடைக்கால சுல்தான் தெங்கு அப்துல்லா, 59, தேர்ந் தெடுக்கப்படலாம் என்று செய்தி கள் தெரிவிக்கின்றன. 15வது மாமன்னராக இருந்த சுல்தான் ஐந்தாம் முகம்மது அண்மையில் பதவி விலகினார். அதனைத் தொடர்ந்து புதிய மாமன்னரைத் தேர்ந்து எடுப்ப தற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. சுழற்சி முறையில் மாமன்னரை தேர்ந்தெடுப்பது காலம்காலமாகத் தொடர்ந்து வரும் வழக்கம். அதன்படி, இம்முறை பாகாங் சுல்தான் அகமது ஷாவும் ஜோகூர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தரும் சுழற்சி பட்டியலில் அடுத்தடுத்து உள்ளனர்.