அமெரிக்காவின் தென் எல்லையில் சுவர் எழுப்பும் தமது கனவுத் திட் டத்தை ஆதரிக்குமாறு அதிபர் டோனல்ட் டிரம்ப் தமது நாட்டி னரைக் கேட்டுக்கொண்டுள்ளார். மெக்சிகோவுடனான அமெ ரிக்க எல்லை தொடர்பான நில வரத்தை 'வளர்ந்துவரும் நெருக் கடி' என்று அவர் குறிப்பிட்டார். அமெரிக்க=மெக்சிகோ எல்லை சுவர் விவகாரத்தில் அரசியல் ரீதி யாக எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து அரசாங்கம் தொடர்ந்து 18வது நாளாக முடங்கி உள்ளது. ஓவல் அலுவலகத்திலிருந்து நாட்டு மக்களிடம் தமது முதல் நேரடி தொலைக்காட்சி உரையை நிகழ்த்திய திரு டிரம்ப், சுவர் எழுப்ப நிதி ஒதுக்குவது அவசியம் என்றார்.
எல்லை விவகாரம் ஒரு நெருக்கடி என்று அவர் குறிப்பிட் டதை ஜனநாயகக் கட்சித் தலை வர்கள் உடனடியாக நிராகரித்தனர். அமெரிக்க=மெக்சிகோ எல்லை என்பது பெருமளவிலான சட்ட விரோத போதைப்பொருட்களும் சட்டவிரோதக் குடியேறிகளும் அமெரிக்காவுக்குள் நுழையும் முக் கிய வழியாக இருக்கிறது என்று திரு டிரம்ப் தமது உரையில் குறிப் பிட்டார். அமெரிக்க சுங்க அதி காரி களும் எல்லை சுற்றுக்காவல் அதி காரிகளும் ஒவ்வொரு நாளும் சட்ட விரோதக் குடியேறிகளை எதிர் கொண்டு சமாளிப்பதாக திரு டிரம்ப் தெரிவித்தார்.

