புரோட்டான் காரில் மகாதீருடன் ஜோகூர் சுல்தான் பயணம்

புரோட்டான் காரில் மகாதீருடன் ஜோகூர் சுல்தான் பயணம்

1 mins read
b6480929-7f7f-4be4-9bc8-dcba54c9394c
-

ஜோகூர் பாரு: ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் வரலாற்று சிறப்புமிக்க 'புரோட்டான் சாகா' காரில் பிரதமர் மகாதீரை அழைத் துச் சென்று பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இந்தக்காரை 34 ஆண்டு களுக்கு முன்பு ஜோகூர் சுல் தானின் தந்தைக்கு திரு மகாதீர் அன்பளிப்பாக வழங்கியிருந்தார். ஜோகூர் அரண்மனையில் நேற்று பிரதமர் மகாதீரும் ஜோகூர் சுல்தான் இப்ராஹிமும் சந்தித்துப் பேசினர். பின்னர் நீல நிற புரோட் டான் காரில் பிரதமர் மகாதீரை 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அனைத்துலக விமான நிலையத் துக்கு ஜோகூர் சுல்தான் இப் ராஹிம் அழைத்துச்சென்றார்.