பெய்ஜிங்: பெய்ஜிங், வாஷிங்டன் இடையே ஒத்துழைப்பே சிறந்த வாய்ப்பாக விளங்குகிறது என்று சீன உதவி அதிபர் வாங் கீஷான் வலியுறுத்தியுள்ளார். அதே சமயத்தில் சீனா தனது பாதையில் தொடர்ந்து பயணம் செய்யும் என்றார் அவர். அமெரிக்க-சீன அதிகாரி களுக்கு இடையிலான வர்த்தகப் பேச்சு ஆக்ககரமான முறையில் முடிந்துள்ள வேளையில் வாங் கீஷான் பேசியுள்ளார். "சீன-அமெரிக்க உறவில் புதிய தொடக்கம் ஏற்பட்டுள்ளது," என்று பெய்ஜிங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் குறிப்பிட்டார். அமெரிக்க-சீன அரச தந்திர உறவு ஏற்பட்டு 40 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வகை யில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. "புதியவற்றைத் தழுவி, நமது பொதுவான இலக்குகளை விரி வாக்கி, இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தி ஆழமாக்க வேண்டும்," என்று சீன உதவி அதிபர் கூறினார். இவ்வாரம் முழுவதும் அமெரிக்க, சீன அதிகாரிகள் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் பதற்றத்தைத் தணிக்கும் பேச்சில் ஈடுபட்டனர்.
'அமெரிக்காவுடன் ஆழமான ஒத்துழைப்பு அவசியம்'
1 mins read
-

