கூட்டத்திலிருந்து வெளியேறிய டிரம்ப்

கூட்டத்திலிருந்து வெளியேறிய டிரம்ப்

1 mins read
0f7e8ea6-7000-42c8-9935-8f8952b068b2
-
Google News Preferred Icon

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் அரசு அலுவலகங்கள் இருபது நாளாக முடங்கிக் கிடக்கிறது. இதற்கு தீர்வு காண வெள்ளை மாளிகையில் ஜனநாயகக் கட்சித் தலைவர்களுடன் அதிபர் டிரம்ப் பேச்சு நடத்தினார். இதில் எந்தப் பலனும் ஏற்படாததால் அவர் பாதியிலேயே வெளியேறினார். அமெரிக்க-மெக்சிகோ எல்லை யில் தடுப்புச்சுவர் கட்டும் டிரம்ப் பின் திட்டத்துக்கு நிதி ஒதுக்க ஜனநாயகக்கட்சியினர் மறுத்து விட்டனர். இதனால் அதிபர் டிரம்ப் கூட்டத்திலிருந்து ஆவேசத்துடன் வெளியேறினார். பின்னர் பேசிய டிரம்ப், "இந்தச் சந்திப்பினால் நேரம்தான் வீணா னது," என்றார்.

அரசு அலுவலகங்கள் முடங்கி யிருப்பதால் சுமார் 800,000 அரசு ஊழியர்களின் சம்பளம் கேள்விக் குறியாகியுள்ளது. இந்தப் பிரச்சினையால் டிரம்புக் குத்தான் பேரிழப்பு என்று பேச்சில் பங்கேற்ற பிரதிநிதிகள் சபையின் நாயகரான நான்சி பெலோசி தெரி வித்தார். படம்: ராய்ட்டர்ஸ்