விமான நிலையத்தில் பறந்து வந்த தேனீக்கூட்டம்

பெட்டாலிங் ஜெயா: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் தேனீக்கள் கூட்டமாக நேற்று மொய்த்ததால் அங்கே சற்று நேரத்திற்கு பரபரப்பு நிலவியது. ஆயினும், அவை பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டதாக விமான நிலையத்தை நிர்வகிக்கும்  மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டின் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜா அஸ்மி ராஜா நஸ்ருடின் தெரிவித்தார்.

மலேசிய வேளாண்மை ஆய்வு மற்றும் மேம்பாட்டுக் கழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் விமான நிலையத்திற்குச் சென்று அந்தத் தேனீக்களைப் பத்திரமாக வெளியேற்றினர்.

செவ்வாய்க்கிழமையன்று, இரண்டாவது கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இதுபோலவே, தேனீக்கள் மொய்த்திருந்தன. பூச்சுக் கட்டுப்பாட்டு அதிகாரில் அவற்றை வேறு வழியின்றி நச்சுப்புகையால் கொன்றதாகக் கூறப்படுகிறது. 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மலேசிய முன்னாள் பேரரசர் சுல்தான் முகம்மது, ரஷ்யாவைச் சேர்ந்த ரிஹானா ஒக்சானா தம்பதியின் திருமண வாழ்க்கை ஓராண்டு காலம் மட்டுமே நீடித்தது. படம்: ரிஹானா/இன்ஸ்டகிராம்

21 Jul 2019

மலேசிய முன்னாள் பேரரசர், ரஷ்ய முன்னாள் அழகி தம்பதியின் விவாகரத்தை உறுதிசெய்த சிங்கப்பூர் வழக்கறிஞர்