கம்போடியா: முன்னாள் பிரதமர் யிங்லக்கிற்கு கடப்பிதழ் வழங்கவில்லை

பேங்காக்: தாய்லாந்து முன்னாள் பிரதமர் யிங்லக் ‌ஷினவத்ரவுக்கு கம்போடியா கடப்பிதழ் (பாஸ்போர்ட்) வழங்கியதாகக் கூறப்படுவதை கம்போடிய அதிகாரிகள் மறுத்துள்ளனர். ஹாங்காங்கில் உள்ள ஒரு துணை நிறுவனத்தின் ஒரே நிர்வாகி தான் மட்டுமே என்பதை பதிவு செய்துகொள்ள யிங்லக் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் கம்போடிய கடப்பிதழைப் பயன்படுத்தியதாக சவுத் சைனா மார்னிஸ் போஸ்ட் புதன்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது. இந்நிலையில் யிங்கலக்கிற்கு கம்போடிய அரசாங்கம் கடப்பிதழ் வழங்கவில்லை என்று கம்போடிய உள்துறை அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.