இந்தோனீசியாவில் அகுங் எரிமலை மீண்டும் வெடித்து குமுறியது

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் பாலித் தீவில் உள்ள அகுங் எரிமலை மீண்டும் வெடித்து குமுறியதாக இந்தோனீசிய அதிகாரிகள் கூறினர். அந்த எரிமலை கக்கிய புகையும் சாம்பலும் அப்பகுதி முழுவதும் நிறைந்திருப்பதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அகுங் எரிமலையின் சீற்றம் அதிகரித்திருப்பதால் அந்த எரிமலைக்கு அருகே குறிப்பிட்ட தொலைவு வரையில் யாரும் செல்ல வேண்டாம் என்று சுற்றுலா பயணிகளுக்கும் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்களுக்கும் ஆலோசனை கூறப்பட்டிருப்பதாக இந்தோனீசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.