ராய்ட்டர்ஸ் நிருபர்களின் மேல்முறையீடு நிராகரிப்பு

யங்கூன்: மியன்மாரின் அதிகாரத்துவ ரகசிய சட்ட விதி முறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டுள்ள ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன நிருபர்கள் இருவர் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மியன்மார் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. அவ் விருவரும் தாங்கள் குற்றமற்ற வர்கள் என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்களை அவர்கள் தாக்கல் செய்யாத காரணத்தால் அவர்கள் செய்திருந்த மேல் முறையீட்டு மனு நிராகரிக்கப் பட்டதாக நீதிமன்றத் தகவல் தெரிவித்தது. ரோஹிங்யா மக்களின் பிரச்சினை தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்றிருந்த ராய்ட்டர்ஸ் நிறுவன நிருபர்களான வா வோல், காவ் சோன் வூ ஆகிய இருவருக்கும் மியன்மார் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் சிறைத்தண்டனை விதித் தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மலேசிய முன்னாள் பேரரசர் சுல்தான் முகம்மது, ரஷ்யாவைச் சேர்ந்த ரிஹானா ஒக்சானா தம்பதியின் திருமண வாழ்க்கை ஓராண்டு காலம் மட்டுமே நீடித்தது. படம்: ரிஹானா/இன்ஸ்டகிராம்

21 Jul 2019

மலேசிய முன்னாள் பேரரசர், ரஷ்ய முன்னாள் அழகி தம்பதியின் விவாகரத்தை உறுதிசெய்த சிங்கப்பூர் வழக்கறிஞர்