டிரம்ப்: அவசரநிலையை பிரகடனம் செய்வேன்

வா‌ஷிங்டன்: அமெரிக்க- மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டுவதற்கு நிதி ஒதுக்க அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைக்கவில்லை என்றால் நாட்டில் அவசரநிலையை அறிவிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார். “நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்த எனக்கு எல்லா உரிமையும் உண்டு ,” என்று திரு டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார். அத்தகைய அறிவிப்பை அதிபர் வெளியிடுவதற்கான ஆயத்தப் பணியில் டிரம்ப் நிர் வாகம் ஈடுபட்டுள்ளதாகத் தெரி கிறது. மறுகட்டுமானத் திட்டங்களுக் காக ஒதுக்கப்படும் நிதியை மற்ற திட்டங்களுக்குப் பயன்படுத்துவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகக் கூறப்படும் தகவலை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.

அமெரிக்க-மெக்சிகோ எல்லை யில் சுவர் கட்டும் திரு டிரம்ப்பின் திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதில் சர்ச்சை தொடர்ந்து நீடிப்பதால் அமெரிக்க அரசாங்கப் பணிகள் கடந்த மூன்று வாரங்களாக முடங்கியுள்ளது. அரசு முடக்கம் காரணமாக அரசாங்க ஊழியர்கள் சுமார் 80,000 பேர் பாதிக்கப்பட்டுள் ளனர். அரசாங்கத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித் துள்ள போதிலும் மெக்சிகோ சுவர் கட்டுவதற்கு திரு டிரம்ப் பரிந்துரை செய்துள்ள 5.7 பில்லியன் டாலர் அந்த நிதியில் சேர்க்கப்படவில்லை.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நார்வே கடலோரப் பகுதியருகே சொகுசு கப்பலிலிருந்து சில பயணிகள் ஹெலிகாப்டர் வழி மீட்கப்பட்டனர். படம்: ராய்ட்டர்ஸ்

25 Mar 2019

ஹெலிகாப்டர் மூலம் சொகுசு கப்பல் பயணிகள் மீட்பு