பாரிஸ்: பிரான்சின் பாரிஸ் நகரில் நேற்று எரிவாயு வெடித்ததில் குறைந்தது 20 பேர் காயம் அடைந் ததாக போலிசார் தெரிவித்துள் ளனர். ரொட்டி மற்றும் கேக் விற்பனை செய்யும் கடையில் ஏற்பட்ட வெடிப்புக்கு எரிவாயுக் கசிவு காரணமாக இருக்கலாம் என்று போலிசார் கருதுகின்றனர். அந்த வெடிப்பைத் தொடர்ந்து மூண்ட தீயை அணைக்க தீயணைப்பாளர்கள் வெகுநேரம் போராடியதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அந்த வெடிப்பில் கார்கள் உட்பட பல வாகனங்களும் அருகில் உள்ள கட்டடங்களும் சேதம் அடைந்ததாகக் கூறப் படுகிறது. அந்த வெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதியை சுற்றி வளைத்த போலிசார் அப் பகுதியிலிருந்து விலகி இருக்கு மாறு மக்களை கேட்டுக் கொண்டனர்.
பாரிஸில் 'எரிவாயு வெடித்ததில்' குறைந்தது 20 பேர் காயம்
1 mins read
-

