கேமரன் மலை: கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் இம்மாதம் 26ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவு கிறது. தேசிய முன்னணி சார்பில் ரம்லி முகம்மது நூர், பக்கத்தான் ஹரப்பானை பிரதிநிதித்து ஐனநாயக செயல் கட்சியின் எம்.மனோகரன் இவர்களுடன் வோங் செங் யீ, சலேஹுதின் அப்துல் தலிப் ஆகிய இரு சுயேச்சை வேட்பாளர்களும் இந்தத் தொகுதியில் போட்டியிடு கின்றனர். இதற்கு முன்னதாக தானும் தேர்தல் களத்தில் இறங்க இருப்பதாகக் கூறிய மைபிபிபி கட்சித் தலைவர் எம்.கேவியஸ் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாகக் கூறியதுடன் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டப் போவதாகவும் அறிவித்தார்.
கேமரன் மலை இடைத்தேர்தலில் நான்கு முனைப் போட்டி
1 mins read
-

