ஜகார்த்தா: இந்தோனீசியாவை சென்ற ஆண்டு சுமார் 11,000 நிலநடுக்கங்கள் உலுக்கியதாக வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. அவற்றுள் 297 நிலநடுக்கங்கள் அளவு கோலில் 5 ரிக்டராக பதிவாகி இருந்ததாகக் கூறப்பட்டது. அண்மைய ஆண்டுகளில் இந்தோனீசியாவில் சராசரி 6,000 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். கடந்த செப்டம்பர் மாதம் மத்திய சுலவேசியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 4,000 பேர் உயிரிழந்தனர்.
இந்தோனீசியாவை சென்ற ஆண்டு உலுக்கிய 11,000 நிலநடுக்கங்கள்
1 mins read

