ஏப்ரல் மாதம் வடகொரியா செல்லும் சீன அதிபர்

ஏப்ரல் மாதம் வடகொரியா செல்லும் சீன அதிபர்

1 mins read

சோல்: சீன அதிபர் ஸி ஜின்பிங் பெரும்பாலும் வரும் ஏப்ரல் மாதம் வடகொரியாவுக்கு பயணம் மேற் கொள்வார் என்றும் அப் பயணத்தைத் தொடர்ந்து வரும் மே மாதம் அவர் தென் கொரியாவுக்கு வருகையளிப்பார் என்றும் தென்கொரியா தெரி வித்துள்ளது. இந்த வாரம் திரு கிம் சீனாவுக்கு திடீர் வருகை புரிந்த போது இரு தலைவர்களும் சந்தித்துப் பேசினர். திரு கிம் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்துப் பேச ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் திரு கிம்மும் அதிபர் ஜின்பிங்கும் அடிக்கடி சந்தித்து வருகின்றனர்.