வாஷிங்டன்: அமெரிக்காவில் கடும் பனிப்புயல் தாக்கி வருகிறது. இது அந்நாட்டின் வட கிழக்குப் பகுதியில் 1,609 கி.மீ. தொலைவு வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்சாஸ், இன்டியானாபோலிஸ், வாஷிங்டன், டென்வர், மிசோரி, செயிண்ட் லூயிஸ், அர்கன்சாஸ் உள்ளிட்ட பல பகுதிகள் பனிப் புயலால் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளன. அங்கு மழை போன்று பனி கொட்டுகிறது. இதனால் அமெரிக் காவின் பாதி அளவு பகுதி வெள்ளை நிற போர்வையால் போர்த்தப்பட்டது போன்று காட்சி அளிக்கின்றன. தெற்கு டென்வரில் உள்ள சங்கிரி டி கிறிஸ்டோ மலைப் பகுதியில் 45 செ.மீ. அளவுக்குப் பனி உறைந்து கிடப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் பனிப்புயல்; விமானச் சேவைகள் ரத்து
1 mins read

