கோலாலம்பூர்: மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் ஜார்ஜ் டவுன் நகரில் உள்ள ஒரு விளையாட்டுத் திடலில் ஒரு கொள்கலனுக்குள் சிக்கிக்கொண்ட 8 வயதுச் சிறுவன் அந்த கொள்கலன் திடீரென்று தீப்பற்றிக்கொண்டபோது தீயில் சிக்கி உயிரிழந்ததாக போலிசார் கூறினர். பழைய மரச்சாமான்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த அந்த கொள்கலனுக்குள் சிறுவர்கள் விளையாடுவது வழக்கம் என்று உள்ளூர் தகவல்கள் கூறுகின்றன. ஒரு சிறுவன் அந்த கொள்கலனுக்குள் சிக்கிக்கொண்டதாக மீட்புக் குழுவினருக்கு தகவல் கிடைத்து அவர்கள் அந்த இடத்திற்கு சென்று சேர்ந்தபோது கொள்கலனில் தீ வேகமாகப் பரவியதாக மீட்புப் பணியாளர் ஒருவர் கூறினார். சிரமப்பட்டு தீயை அணைத்த தீயணைப்பாளர்களால் சிறுவனின் கருகிய உடலை மட்டுமே மீட்க முடிந்தது என்று உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
கொள்கலனில் தீ; சிறுவன் மரணம்
1 mins read

