தெரேசா மே: பிரெக்சிட் உடன்பாட்டை ஆதரிக்கவும்

தெரேசா மே: பிரெக்சிட் உடன்பாட்டை ஆதரிக்கவும்

1 mins read

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத் திலிருந்து பிரிட்டன் வெளியேறு வது தொடர்பில் ஐரோப்பிய நாடுகளுடன் பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே இணக்கம் கண்டுள்ள பிரெக்சிட் உடன்பாடு குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நாளை வாக்கெடுப்பு நடத்தப்பட வுள்ளது. இந்நிலையில் பிரதமர் தெரேசா மே, பிரெக்சிட் உடன்பாட்டை ஆதரிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த உடன்பாட்டை பிரிட்டிஷ் எம்பிக்கள் ஆதரிக்கவில்லை என்றால் ஐரோப்பிய ஒன்றியத் திலிருந்து பிரிட்டன் வெளியேறு வதில் சிக்கல் நீடிக்கும் என்று தெரேசா மே கூறினார்.

எந்த உடன்பாடும் இல்லை என்றால் ஐரோப்பிய ஒன்றியத் திலிருந்து பிரிட்டன் வெளியேறு வது சாத்தியமாகாது என்றும் அவர் குறிப்பிட்டார். பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பிரெக்சிட் உடன்பாடு தோல்வி அடைந்தால் நமது ஜனநாயகத்தில் அது பெரும் நம்பிக்கை மோசடி யாக இருக்கும் என்றும் அவர் கூறினார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் பிரதமர் தெரேசா மே கண்டுள்ள உடன்பாட்டிற்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் ஆதரவு இருக்காது என்று எதிர் பார்க்கப்படுகிறது.