பாரிஸ் வாயு வெடிப்பு; பலி எண்ணிக்கை நான்காக உயர்வு

பாரிஸ் வாயு வெடிப்பு; பலி எண்ணிக்கை நான்காக உயர்வு

1 mins read
ced6f7fb-0565-4600-a34e-063322303855
-
Google News Preferred Icon

பாரிஸ்: மத்திய பாரிசில் நேற்று ஏற்பட்ட வாயு வெடிப்பில் மாண்டோரின் எண்ணிக்கை நான்காக உயர்ந்திருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். தாக்குதலில் பெண் ஒருவர், இரண்டு தீயணைப்பாளர்கள், ஸ்பெயினைச் சேர்ந்த ஒரு சுற்றுப்பயணி ஆகியோர் மாண்டனர்.

வெடிப்பில் சுற்றுப்பயணிகள் உள்பட சுமார் 50 பேர் காயமடைந்தனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. பிரஞ்சு அதிபர் இமானுவெல் மக்ரோன் உயிரிழந்தோருக்கு டுவிட்டர் வழியாக தமது இரங்கலை தெரிவித்தார்.