தோஹா: கத்தாருக்கும் மற்ற வளைகுடா நாடுகளுக்கும் இடையிலான மோதல் போக்கு வெகு காலமாக நீடித்துள்ளது என்று வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ தெரிவித்திருக்கிறார். இந்தப் பிரச்சினையால் ஈரானை எதிர்ப்பதற்குத் தேவையான வட்டார ஒற்றுமை பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். சவூதி அரேபியோ, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், பஹ்ரேன், எகிப்து ஆகிய நாடுகள் கத்தாருடன் அரசதந்திர உறவுகளை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் முறித்துக்கொண்டன. கத்தார் பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாகவும் ஈரானை ஆதரிப்பதாகவும் இந்நாடுகள் குற்றஞ்சாட்டுகின்றன. இதனை கத்தார் மறுக்கிறது.
"நாங்கள் அனைவரும் எதிர்நோக்கும் சவால் ஒன்றுதான். ஒரே நோக்கங்களைக் கொண்ட இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலால் எந்தப் பயனும் இல்லை," என்று திரு போம்பியோ, கத்தாரின் தலைநர் தோஹாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

