மேடையில் மேயருக்குக் கத்திக்குத்து

மேடையில் மேயருக்குக் கத்திக்குத்து

1 mins read
03a210c0-ca1b-41f7-af72-384e9f098be4
-
Google News Preferred Icon

கிடான்ஸ்க்: போலந்தின் கிடான்ஸ்க் நகரின் மேயர் பவெல் அடெமொவிச்ஸ், ஞாயிற்றுக்கிழமை நன்கொடை நிகழ்ச்சி ஒன்றின்போது கத்தியால் குத்தப்பட்டதாக அந்நாட்டுக் காவல் துறையினர் தெரிவித்தனர்.

அடமொவிச்ஸ் மாண்டதாக தாக்குதல் நடத்தியவர் உரக்கக் கூறியதை தொலைக்காட்சி காணொளிப் பதிவுகள் காட்டுகின்றன. அடமொவிச் தலைமையிலான முன்னைய அரசாங்கத்தின்கீழ் தான் சிறையில் இருந்தபோது சித்திரவதை செய்யப்பட்டதால் தாக்குதலை நடத்தியதாக அவர் கூறினார்.

தாக்கப்பட்ட 53 வயது அடெமொவிச்ஸ் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.