'ஒப்பந்தம் இல்லையென்றால் பிரெக்சிட் முடக்கப்படலாம்'

'ஒப்பந்தம் இல்லையென்றால் பிரெக்சிட் முடக்கப்படலாம்'

1 mins read
caf268b5-d16c-47c8-aa7c-e2494d12fc38
-

ஒப்பந்தமின்றி பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறுவதைக் காட்டிலும் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றத்தை முடக்கும் வாய்ப்பு அதிகம் என்று பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே இன்று கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தின் மத்திய பகுதியில் தொழிற்சாலை ஊழியர்கள் முன்னிலையில் இன்று உரையாற்றவுள்ள திருமதி மே இவ்வாறு கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாற்பது ஆண்டுகளில் பிரிட்டனின் ஆகப் பெரிய வெளியுறவு கொள்கை மாற்றமாக உள்ள இந்த வெளியேற்றம் தொடர்பில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து அந்நாட்டு நாடாளுமன்றம் இழுபறி நிலையில் உள்ளது.