கட்டணத்தைக் குறைக்கும் இந்தோனீசிய விமான நிறுவனங்கள்

கட்டணத்தைக் குறைக்கும் இந்தோனீசிய விமான நிறுவனங்கள்

1 mins read
46d1b2d9-0928-4fda-912c-9b4df4b6337b
-
Google News Preferred Icon

இந்தோனீசிய விமான நிறுவனங்கள், தங்களது உள்நாட்டுச் சேவைக் கட்டணங்களை கடந்த வாரம் வெகுவாகக் குறைத்திருக்கின்றன. சில பயணங்களுக்கானக் கட்டணங்கள் 60 விழுக்காடு வரை குறைக்கப்பட்டுள்ளது. விடுமுறைக் காலத்தில் விமானச் சீட்டுக்களின் விலையேற்றம் பரவலாகக் குறைகூறப்பட்டதை அடுத்து கட்டணங்கள் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன. பிடி கருடா இந்தோனீசியா, லயன் ஏர், பிடி ஏர்ஏ‌ஷியா உள்ளிட்ட நிறுவனங்கள் ஜனவரி 11ஆம் தேதி முதல் தங்களது விமான விலைகளைக் குறைத்திருப்பதாக இந்தோனீசியாவின் தேசிய விமானப் பயணச் சங்கம் தெரிவித்தது. இந்தோனீசியர்களுக்கு விமான பயணச் சேவைகளைக் கட்டுப்படியான விலைக்கு வழங்குவது இதன் நோக்கம் என்றும் இது நாட்டின் பொருளியல் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு உதவும் என்றும் இந்தச் சங்கம் கூறியது.