துருக்கியை எச்சரித்த அதிபர் டிரம்ப்

வா‌ஷிங்டன்: சிரியாவிலிருந்து அமெரிக்க ராணுவத்தினரை வெளியேற்ற அதிபர் டோனல்ட் டிரம்ப் முடிவெடுத்துள்ளார். அமெரிக்க ராணுவம் சிரியா விலிருந்து வெளியேறிய பிறகு அங்கிருக்கும் குர்தியப் போராளி களைத் துருக்கி தாக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. குர்தியப் போராளிகளை துருக்கி தாக்கினால் அந்நாட்டின் பொருளியலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதே சமயத்தில், துருக்கியின் கோபத்தைத் தூண்டிவிடும் விதம் குர்தியப் போராளிகள் நடந்து கொள்ளக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஐஎஸ் பயங்கரவாத அமைப் புக்கு எதிரான போரில் அமெரிக்க ராணுவத்துக்கு உதவியாக குர்தியப் போராளிகள் சண்டை யிட்டது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், குர்தியப் போராளிகளைப் பயங்கரவாதிகள் என துருக்கி கருதுகிறது. குர்தியப் போராளிகளுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்குவது குறித்து துருக்கிய அதிபர் ரெசெப் எர்டோவான் அதிருப்தி தெரி வித்துள்ளார். குர்தியப் போராளிகளை அழிக்க அவர் சூளுரைத்துள்ளார். துருக்கிக்கும் அமெரிக்கா வுக்கும் இடையிலான முக்கியப் பங்காளித்துவத்துக்கு அதிபர் டிரம்ப் தகுந்த மரியாதை அளிக்க வேண்டும் என துருக்கி எதிர் பார்ப்பதாக அதிபர் எர்டோவானின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் கலின் டுவிட்டர் மூலம் தெரி வித்தார். "பயங்கரவாதிகள் பங்காளி களாக இருக்க முடியாது," என்று அவர் டுவிட்டரில் தெரிவித்தார். சிரியாவில் குர்தியப் போராளி களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலிருந்து அமெரிக்கப் படையினரை வெளியேற்ற அதிபர் டிரம்ப் கடந்த மாதம் உத்தரவிட்ட போது அமெரிக்காவின் நட்பு நாடுகள் அதிர்ச்சிக்கு உள்ளாகின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!