கத்திக்குத்து: போலந்து மேயர் மரணம்

கத்திக்குத்து: போலந்து மேயர் மரணம்

1 mins read
51f22bd8-b1c3-4b9a-a892-ddb6a4ccbc6c
-

கிடான்ஸ்: போலந்தில் நடைபெற்ற நன்கொடை நிகழ்ச்சியின்போது கத்தியால் குத்தப்பட்ட போலந்து மேயர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

'கிடான்ஸ்' நகரின் மேயராக இருந்த பவெல் அடெமொவிச், ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி மேடையில் இருந்தபோது திடீரென ஆடவர் ஒருவர் அதில் ஏறி அவரைக் கத்தியால் குத்தினார். அடெமொவிச் தலைமையிலான அரசாங்கத்தின்கீழ் தான் சித்திரவதை செய்யப்பட்டதாக தாக்குதலை நடத்திய ஸ்டெஃபன் என்ற 27 வயது ஆடவர் போலிஸ் விசாரணையின்போது தெரிவித்தார்.

அடெமொவிச்சுக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கானோர் போலந்தின் பல்வேறு நகரங்களில் கூடினர். அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் நாளை தேசிய துக்க அனுசரிப்பு நாளாக போலந்து அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே, வார்சா நகரைச் சேர்ந்த 72 வயது ஆடவர், அடுத்து கொல்லப்படவிருப்பவர் போலந்து அதிபர் அன்டர்ஸெஜ் டுடா என்று தொலைபேசி மூலம் மிரட்டியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளதாக போலந்து போலிசார் தெரிவித்துள்ளனர்.