காபூல் கார் குண்டுவெடிப்பில் நால்வர் பலி

காபூல் கார் குண்டுவெடிப்பில் நால்வர் பலி

1 mins read
d7b08cc5-6feb-4615-a482-032d0fea7b3a
-
Google News Preferred Icon

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நிகழ்ந்த கார் குண்டுத் தாக்குதலில் குறைந்தது நால்வர் உயிரிழந்ததாகவும் 90க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் 23 சிறார்களும் அடங்குவர். மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

சம்பவத்திற்கு இதுவரை எவரும் பொறுப்பேற்கவில்லை.

ஆப்கான் அரசாங்கம், தலிபான் பயங்கரவாத அமைப்புடன் சமாதானப் பேச்சுகளில் ஈடுபடும் நேரத்தில் இத்தாக்குதல் நடந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அமெரிக்காவிலிருந்து துருப்புகளைப் படிப்படியாக மீட்டுக்கொள்ள முடிவு செய்துள்ளதாக கடந்த மாதம் தகவல் வெளிவந்ததை அடுத்து ஆப்கானிஸ்தான் மீண்டும் தலிபான் அதிகாரத்தின்கீழ் அகப்படும் என்று அந்நாட்டு மக்கள் பலர் அஞ்சுவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.