அரியவகை பறவையைக் கொன்று சமைத்த ஆடவர் கைது

அரியவகை பறவையைக் கொன்று சமைத்த ஆடவர் கைது

1 mins read
411bbad8-9b34-46a9-989c-97b2b4e3d147
-
Google News Preferred Icon

மெடான்: இந்தோனீசியாவின் ரியாவ் மாநிலத்தில் 29 வயது ஆடவர் ஒருவர் சட்டவிரோதமாக விலங்குகளை வேட்டையாடிய குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அர்ஹெடி என்ற அந்த ஆடவர், பறவை ஒன்றின் தலையை தான் வெட்டிக் கொல்வதைக் காட்டும் காணொளியை சமூக ஊடகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பதிவேற்றம் செய்தார். அந்தப் பறவை அருகிவரும் 'ஹார்ன்பில்' இனத்தைச் சேர்ந்தது. தகவல் அறிந்த போலிசார், ரப்பர் மரத்தோட்ட ஊழியராக பணிபுரியும் அர்ஹெடியைக் கைது செய்தனர்.

'ஹார்ன்பில்' பறவையைக் கவணால் சுட்டு வீழ்த்தியதாகக் கூறப்படும் அர்ஹெடியுடன் வேலை செய்யும் ஓஜி என்பவரை போலிசார் தேடி வருகின்றனர்.