சரவாக்கில் தீச்சம்பவம்: வீடுகளை இழந்த 130 ஊழியர்கள்

சரவாக்கில் தீச்சம்பவம்: வீடுகளை இழந்த 130 ஊழியர்கள்

1 mins read
1d5eb629-9b32-4c8d-a9d4-023f151a383e
-

மலேசியாவின் சரவாக் மாநிலத்தின் மத்திய பகுதியிலுள்ள பக்குன் டாம் என்ற கிராமத்தில் வீடுகள் தீப்பற்றி எரிந்தன.

இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 2 மணிக்கு நிகழ்ந்ததாக 'தி ஸ்டார்' நாளிதழ் தெரிவித்தது.

அந்தக் கிராமத்தில் தொலைதொடர்பு வசதி இல்லாததால் தீயணைப்புப் படையினர் வெகு நேரத்திற்குப் பிறகு சம்பவ இடத்தை அடைந்ததாக மாநில தீயணைப்பு, மீட்புத் துறை தெரிவித்தது.

விபத்திற்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.