நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து

நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து

1 mins read
5eae36da-6475-47a2-8743-36b0671bbd99
-

எட்டு ஜெர்மானிய விமான நிலையங்களில் பணிபுரியும் பாதுகாப்பு அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் அந்நாட்டில் நூற்றுக்கணக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அதிகாரிகள் தங்களது சம்பளம் குறித்த கடும் அதிருப்தியால் இவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவத்துள்ளன.

இதனால் ஏற்படும் சேவைத் தடைகளாலும் தாமதங்களாலும் குறைந்தது 220,000 பயணிகள் பாதிக்கப்படுவர் என்று அந்நாட்டின் விமான நிலைய சங்கம் தெரிவித்தது.