அம்னோ பிரமுகர் கைது

அம்னோ பிரமுகர் கைது

1 mins read
35674e24-1159-449b-9318-256b8fb4f78c
-

புத்ரஜெயா: மலேசியாவில் அம்னோ கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகரை ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அம்னோ உச்சமன்ற குழுவின் உறுப்பினரான அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம் நேற்று மாலை 4 மணி அளவில் கைது செய்யப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாலிங் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல் அஸிஸ் மீது கள்ளப்பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றிய குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று பிற்பகல் 2.55 மணி அளவில் மலேசிய ஊழல் தடுப்புப் பிரிவு கட்டடத்துக்கு அவர் வந்ததாகவும் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாகவும் ஊடகங்கள் குறிப்பிட்டன. PHOTO: THE STAR/ASIA NEWS NETWORK