பாகாங் சுல்தானாக அப்துல்லா பதவியேற்பு

பாகாங் சுல்தானாக அப்துல்லா பதவியேற்பு

1 mins read
cde66aba-7866-4b60-9adc-47d0ec4f0570
-
Google News Preferred Icon

பாகாங்: மலேசியாவின் 3வது பெரிய மாநிலமான பாகாங்கின் புதிய சுல்தானாக அப்துல்ல பதவியேற்றுக்கொண்டார். அரண்மனையில் நடைபெற்ற சடங்குபூர்வ நிகழ்ச்சியில் பாகாங்கின் சுல்தானாக திரு அப்துல்லா நியமிக்கப்படும் பிரகடனத்தை அவரது இளைய சகோதரர் முடா பாகாங் அப்துல் ரஹ்மான் வாசித்தார். பின்னர் 59 வயது அப்துல்லா காலை 11 மணி அளவில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். இதையடுத்து சுழற்சி முறையில் திரு அப்துல்லா நாட்டின் அடுத்த மாமன்னராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.