வாஷிங்டன்: அமெரிக்காவில் நிதி ஒதுக்கப்படாததால் அரசாங்க அமைப்புகள் முடங்கியுள்ளன. இதனால் உணவு தயாரிக்கும் ஊழியர் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் வேறு வழியின்றி வெள்ளை மாளிகைக்கு விரைவு உணவுவகைகளை வரவழைத்து அதிபர் டிரம்ப் விருந்தளித்துள்ளார். தேசிய கல்லூரி காற்பந்து வெற்றியாளரான கிளம்சன் டைகர்ஸ் குழுவை 300க்கும் மேற்பட்ட பர்கர், ஃபிரைஸ், பிசா உள்ளிட்ட விரைவு உணவுகளுடன் அதிபர் டிரம்ப் வரவேற்றுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், "அரசாங்கம் முடங்கியிருப்பதால் எனக்குக் கொடுக்கப்பட்ட பணத்தில் விரைவு உணவு வகைகளை வரவழைத்தேன்," என்றார். படம்: ராய்ட்டர்ஸ்
200 பர்கர்களை வரவழைத்த அதிபர் டிரம்ப்
1 mins read
-

