பெய்ஜிங்: சீனாவில் கனடியர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதால் சீனா - கனடா உறவு மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் கனடாவைச் சேர்ந்த ராபர் லாயிட் ஷெல்லென்பெர்க்குக்கு போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் திங்கட்கிழமை அன்று மேல்முறையீட்டில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை மிகவும் குறைவு என்று கூறிய நீதிபதி, மரண தண்டனை விதித்தார். இந்நிலையில் ஷெல்லென்பெர்க்கின் அத்தையான லாவ்ரி-ஜோன்ஸ், "நாங்கள் அச்சத்துடன் எதிர்பார்த்த கொடூரமான சூழ்நிலை உண்மையாகிவிட்டது," என்றார்.
'கனடியருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை கொடூரமானது'
1 mins read
-

