பிரதமர் மேயின் பிரெக்சிட் திட்டத்திற்கு சோதனை

பிரதமர் மேயின் பிரெக்சிட் திட்டத்திற்கு சோதனை

1 mins read
f0ace3b8-6823-4d9b-bb07-65dd716532aa
-
Google News Preferred Icon

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான திட்டத்தை பிரிட்டி‌ஷ் பிரதமர் வகுத்துள்ளார். இந்தத் திட்டத்தை ஏற்கெனவே ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதில் பிரதமர் மே சிரமத்தை எதிர்நோக்குகிறார். இந்நிலையில் அவரது திட்டத்திற்கு நாடாளுமன்ற அங்கீகாரம் கிடைக்காது என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். ஐந்து நாட்கள் நாடாளுமன்ற வாதம் டுடிந்துள்ளதால் பிரெக்சிட் திட்டம் மீதான வாக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.