கென்யா ஹோட்டலில் 14 பேர் சுட்டுக்கொலை

கென்யா ஹோட்டலில் 14 பேர் சுட்டுக்கொலை

1 mins read
93411cd0-e7b6-4173-8155-2f68a4d41f15
-

நைரோபி: கென்யாவின் தலைநகர் நைரோபியில் துப்பாக்கிக்காரர்கள் ஹோட்டலுக்குள் புகுந்து 14 பேரைக் சுட்டுக்கொன்றனர். மாண்டோரில் ஓர் அமெரிக்கரும் பிரிட்டனைச் சேர்ந்த ஒருவரும் உள்ளடங்குவர்.'அல் ஷபாப்' என்ற பயங்கரவாத அமைப்பு இதற்குப் பொறுப்பேற்றுள்ளது.

இந்த அமைப்பு கென்யாவில் பலமுறை தாக்குதல்கைளை நடத்தியுள்ளது. 2013ஆம் ஆண்டில் வெஸ்ட்கேட் கடைத்தொகுதியில் 67 பேரும் 2015ஆம் ஆண்டில் 150 பல்கலைக்கழக்க மாணவர்களும் 'அல் ஷபாப்' அமைப்பினரால் கொல்லப்பட்டனர்.

உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துபோன சோமாலியாவில் தனது துருப்புகளை அனுப்பிய கென்யாவைப் பழிவாங்க இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக 'அல் ஷபாப்' கூறியது.