பிரசாரத்தில் இறங்கும் இந்தோனீசிய அதிபர் வேட்பாளர்

பிரசாரத்தில் இறங்கும் இந்தோனீசிய அதிபர் வேட்பாளர்

1 mins read
3c9aefad-84e8-4602-91d7-a53f4377ceb2
-

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் வரும் பொதுத்தேர்தலில் அந்நாட்டு அதிபர் ஜோக்கோ விடோடோவுக்கு எதிராகப் போட்டியிடவுள்ள பிரபோவோ சுபியாண்டோ, வறுமையைத் துடைத்தொழிக்கப்போவதாகச் சூளுரைத்திருக்கிறார்.

செழிப்பான வளங்களைக் கொண்ட ஒரு நாட்டில் மக்கள் வறுமையில் வாழ்வது முரணாக இருப்பதாகக் கூறிய திரு சுபியாண்டோ, ஜகார்த்தாவில் நேற்று ஆற்றிய தமது முதல் தேர்தல் பிரசார உரையில் இதனைக் குறிப்பிட்டார்.

பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி நடைபெறும். 2014ஆம் ஆண்டில் நிகழ்ந்த தேர்தலில் திரு சுபியாண்டோ, தற்போதைய அதிபர் ஜோக்கோ விடோடோவிடம் தோல்வியுற்றார்.