கென்யாவில் பயங்கரவாத தாக்குதல்: பலர் மரணம்

கென்யாவில் பயங்கரவாத தாக்குதல்: பலர் மரணம்

1 mins read
106f511c-c993-4f35-a21a-be12477b73d3
-

நைரோபி: கென்யா தலைநகரம் நைரோபியில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் பயங்கர வாதிகள் நேற்று தாக்குதல் நடத் தினர். 'டுசிட் டி2' எனும் ஹோட்டலைப் பயங்கரவாதிகள் தாக்கியதில் குறைந்தது 14 பேர் மாண்டதாக கென்யாவின் அதிபர் உஹுரு கென்யாட்டா தெரிவித்தார். ஆனால் மாண்டோர் எண்ணிக்கை 24 என கென் யாவின் செஞ்சிலுவைச் சங்கம் கூறியது. தாக்குதலுக்கு சோமாலி யாவைச் சேர்ந்த அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப் பேற்றுள்ளது. சிங்கப்பூர் நேரப்படி நேற்று காலை 8 மணி அளவில் ஹோட்டல் வளாகத்துக்குள் நுழைந்த நான்கு பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியதாகக் கூறப்படுகிறது.

அதன் பிறகு அவர்கள் ஹோட்டலின் வரவேற்புப் பகுதிக்குச் சென்றதாகவும் அங்கு அவர்களில் ஒருவர் தன்னைத் தானே வெடிக்கச் செய்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதலில் கூடுதல் பயங்கரவாதிகள் ஈடுபட்டிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படு கிறது. ஹோட்டலுக்கு விரைந்த கென்யா பாதுகாப்புப் படையின ருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. ஹோட்டலில் சிக்கித் தவித்த பலரை பத்திரமாக வெளியேற்றினர் பாதுகாப்புப் படையினர்.