சூடுபிடிக்கும் பிரெக்சிட் விவகாரம்

சூடுபிடிக்கும் பிரெக்சிட் விவகாரம்

1 mins read
486c1b23-756f-43b3-9dfa-6e7dd700ddd6
பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே (இடமிருந்து மூன்றாவது) முன்வைத்த பிரெக்சிட் திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலோர் ஏற்க மறுத்தனர். படம்: ராய்ட்டர்ஸ் -
Google News Preferred Icon

லண்டன்: பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே முன்வைத்த பிரெக்சிட் திட்டத்தை அந் நாட்டு நாடாளுமன்ற உறுப்பி னர்கள் நேற்று ஏற்க மறுத்தனர். 432 உறுப்பினர்கள் திட்டத்துக்கு எதிராகவும் 202 உறுப்பினர்கள் ஆதரவாகவும் வாக்களித்தனர். பிரெக்சிட் திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நிராகரித்திருப்பது பிரதமர் மேக்கு ஏற்பட்டுள்ள அவமானம் என்றும் மிகவும் மோசமான தோல்வி என்றும் பிரிட்டிஷ் நாளிதழ்கள் தெரி வித்திருந்தன. பிரெக்சிட் விவகாரம் குறித்து மார்ச் மாதம் 29ஆம் தேதிக்குள் பிரிட்டன் முடிவு எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பிரெக்சிட் திட்டத்தை ஏற்க பிரிட்டிஷ் நாடாளுமன்றம் எதிர்ப்பு தெரிவித்த பிறகு, எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் பிரதமர் மேக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துக்கு அழைப்பு விடுத்தார். நேற்று மாலை நிலவரப்படி பிரெக்சிட் விவகாரத்தில் இழுபறி நீடித்தது. நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் முடிவு சிங்கப்பூர் நேரப்படி இன்று அதிகாலை வெளியாகியிருக் கும். இதில் தெரேசா மே தோற்றால் பிரதமர் பதவியி லிருந்து விலக வேண்டிவரும்.